தலையில் எதிர்பாராதவிதமாக பந்து தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் உயிரிழந்துள்ளார்.
அவுஸ்ரேலிய முதல் தர கிரிக்கெட் போட்டியான, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் தெற்கு அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையே கடந்த செவ்வாய்க் கிழமை நடைபெற்றது போட்டியின் போது துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த பிலிப்பின் தலையில் பவுன்சராக வந்த பந்து எதிர்பாராத விதமாக பலமாக தாக்கியது.
இதில் படுகாயமடைந்த பிலிப் உடனடியாக அம்புலன்ஸ் மூலமாக சிட்னியில் உள்ள எஸ்.டி.வின்செண்ட் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் 25 வயதுடைய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் இன்று உயிரிழந்துள்ளார்.
பிலிப் ஹியூக்ஸ் அவுஸ்ரேலிய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளிலும், 25 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments