2014 ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட புத்தளம் புகைப்பட ஒன்றியம் தனது அறிமுக நிகழ்வாக புத்தளம் மற்றும் அதை சார்ந்த பிரதேசங்களை உள்வாங்கி புகைப்பட போட்டியொன்றை அறிவித்து இருந்தது.
இந்த புகைப்பட போட்டியில் மூன்று வெவ்வேறு தலைப்புக்களில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலதரப்பினர் மிகுந்த ஆர்வத்தோடு பங்கேற்று தங்கள் புகைப்பட திறமையை வெளிப்படுத்தி இருந்தனர்.
இப்போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றிபெறும் போட்டியாளர்களுக்கு பெறுமதிமிக்க நவீன இலத்தினரனியல் புகைப்பட கருவிகள் பரிசளிக்கப்படும் என்று புத்தளம் புகைப்பட ஒன்றியம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.
போட்டியின் இறுதி திகதி ஜூன் 15ம் திகதி என்று நிர்ணயத்திருந்த போதிலும், இடையில் ஏற்பட்ட சில தவிர்க்க முடியாத காரணங்களால் போட்டியின் இறுதி திகதியும் வெற்றியாளர்கள் பற்றிய விபரங்களும் வெளியிடுவதில் மிகுந்த தாமதம் ஏற்பட்டது.
இதற்காக வேண்டி புத்தளம் புகைப்பட ஒன்றியம் போட்டியளர்களிடமும் பொதுமக்களிடமும் தங்கள் வருத்தத்தை தாழ்மையோடு தெரிவித்துக்கொள்கின்றது.
புத்தளம், கல்பிட்டி மற்றும் மதுரங்குளி என்று புத்தளத்தை சூழ உள்ள எல்லா இடங்களிலும் இருந்து பலநூறு போட்டியாளர்கள் பங்குகொன்ற அந்த போட்டியின் முடிவுகளை இன்று வெளியிடுவதில் நாம் பேறு மகிழ்ச்சி கொள்கிறோம்.
Winner of first prize
Name : Mohamed Faleel Maheesha Baanu
Address : Malay Street, Kalpitiya.
Camera : Canon EOS 5D
Winner of Second Prize
Name : Balakrishna Sarma Gajanantha Sarma
Address : Sri Muthumariamman Temple, Puttalam.
Camera : Canon Powershot A2500
Name : Balakrishna Sarma Gajanantha Sarma
Address : Sri Muthumariamman Temple, Puttalam.
Camera : Canon Powershot A2500
Winner of Third Prize
Name : Thirunavukkarasu Nishanthan
Address : Western Saltern Road, Puttalam.
Camera : Sony DSCa-W710
Name : Thirunavukkarasu Nishanthan
Address : Western Saltern Road, Puttalam.
Camera : Sony DSCa-W710
பங்கு பற்றியவற்களுக்கான பரிசல்களும் சான்றிதழும் வழங்கும் வைபவம் பின்னர் அறிவிக்கப்படும்.
வெற்றி பெறாத சிறந்த புகைப்படங்களும் விரைவில் எமது முகநுல் மூலம் பகிரப்படும்,
நன்றி.
ஷாகிர் அரபாத், இஹ்ஷான்
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் .
https://www.facebook.com/kalpitiyavoice




0 Comments