Subscribe Us

header ads

ஆளுங்கட்சியை உடைக்கும் மங்கள! மங்களவின் இரண்டாம் இன்னிங்ஸ் இன்று ஆரம்பம் !!


மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சியில் இணையவைத்து ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்த மங்கள சமரவீர, மல்டிபெரல் அடி மூலம் ஆளுங்கட்சிக்கு சாவுமணி அடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் முக்கியஸ்தரான மங்கள சமரவீர, ஜனாதிபதி மஹிந்தவை விட கட்சிக்குள் செல்வாக்கு மிக்கவர். சிறுபான்மை கட்சிகளுடனும் நல்லுறவை கொண்டவர்.

மஹிந்த ஆட்சியின் ஆரம்பத்திலேயே சர்வாதிகாரம் தொடர்பான எதிர்வு கூறலுடன் கட்சியை விட்டு வெளியேறியவர்.

இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் மைத்திரிபால சிரிசேனவை ஆளுங்கட்சியில் இருந்து வெளியே அழைத்து வந்து பொது வேட்பாளராக்கியதில் மங்கள சமரவீர முக்கிய பங்கு வகித்திருந்தார்.

மேலும் ராஜித சேனாரத்தின, துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் எதிர்க்கட்சிக்கு அழைத்து வருவதில் திரைக்குப் பின்னால் நின்று செயலாற்றியவர் மங்கள சமரவீர என்பது பரம ரகசியமாகும்.

இந்த கட்சி தாவல் நடவடிக்கை ஆளுங்கட்சிக்கான மரண அடி என்று அரசியல் வட்டாரத்தில் வியந்து பேசப்படுகின்றது.

மங்கள சமரவீரவின் செயலுக்குப் பதிலடியாக இன்று ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து மூன்று முக்கியஸ்தர்களை ஆளுங்கட்சிக்கு இழுத்தெடுப்பதில் ஜனாதிபதி நேரடியாக களமிறங்கி வெற்றி கண்டிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.

இதனையடுத்து மங்கள சமரவீர தற்போது தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆரம்பித்துள்ளார்.
இதன் போது ஆளுங்கட்சியின் இரண்டாம் அதிகாரம் கொண்ட பதவி வகித்தவர்கள் தொடக்கம் எதிர்க்கட்சி வரிசைக்குத் தாவ உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்த உளவு தகவல்கள் ஜனாதிபதிக்கு மட்டுமன்றி, ஏனைய முக்கிய அரசியல்வாதிகளுக்கும் கசிந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

ஆறு கட்டங்களில் மொத்தமாக ஆளுங்கட்சியை காலி செய்ய மங்கள திட்டமிட்டுள்ளதாக இது தொடர்பாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னையது ஆளுங்கட்சிக்கான மரண அடி என்றால் பின்னையது மல்டிபெரல் அடியாக இருக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கின்றது.
 -AsM-

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

Post a Comment

0 Comments