Subscribe Us

header ads

முஸ்லிம்கள் ஜனாதிபதி வேட்பாளராய் யாரை ஆதரிப்பது பொருத்தமானதாய் அமையும்..?

Presentation1ஜன்மம்
-துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-
இலங்கை மக்களின் பலத்த எதிர் பார்ப்பிற்கு மத்தியில் மறைத்து வைத்திருந்த பொது வேட்பாளர் திரை விலப்பட்டுள்ளது.ஜனாதிபதி மகிந்த ராஜ பக்சவை வீழ்த்த ஜனாதி பக்கம் இருந்தே அதுவும் அமைச்சர் மைத்திறி பால சிறிசேன வருவார் என யாரும் சிறிதும் நினைக்க வில்லை. மைத்திறி பால சிறிசேனவின் வருகை ஆட்சி மாற்றம் வருமா?என ஏங்கிய மக்களின் பசிக்கு தீனி போடும் விதமாய் அமைந்துள்ளது.எதிரணி அரசியல் நேற்றிலிருந்து சூடு பிடிக்கவும் ஆரம்பித்துள்ளது.
யார் மலையைப் பிளந்தாலும் காற்றில் நடந்தாலும் நமக்கு நமது காரியத்தை இதன் மூலம் சாதிக்க இயலுமா?என்பதைத் தான் நாம் சிந்திக்க வேண்டும்.
பெரும் பான்மை இனத்தவர்களில் முஸ்லிம்களிற்காய் குரல் கொடுத்தோராய் பிரதமர் டி.பி ஜயரத்ன,பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித தேவப் பெரும,ஜானக பண்டார போன்றோரை குறிப்பிடலாம் ஏன்?அமைச்சர் மேர்வின் சில்வாவையும் குறிப்பிட்டாலும் தப்பில்லை.பொது பல சேனாவை எதிர்த்தோர் வரிசையில் ராஜித சேனா ரத்னா போன்றோரையும் குறிப்பிடலாம்.
ஆனால்,அளுத்கமை பிரச்சனை நடைபெற்ற போது தற்போதைய பொது வேட்பாளர் மைத்திறி பால சிறிசேன முஸ்லிம்களிற்கு யாது செய்தார்?.இவர் எந்தளவு முஸ்லிம்களிற்கு சார்பானவர்? போன்ற வினாக்களிற்கு எந்த பதிலும் இல்லை என்றே கூற வேண்டும்.அதே நேரம் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க,விமல் வீரவன்ச,ஹெல உறுமய கட்சி போன்று முஸ்லிம்களிற்கு எதிராக இன வாதக் கருத்துக்களை மக்கள் மத்தியில் தூவியவர்கள் வரிசையில் இவர் இல்லாமல் இருப்பதும் இவர் ஏழைகளின் தோழன் என்ற கருத்துக்கள் மக்கள் மத்தியில் நிலவுவதும் சற்று மனதிற்கு நிம்மதியைத் தருகிறது.
நாம் எமது முஸ்லிம் இனத்திற்கு சிறந்த பாதுகாப்பை வழங்கத் தவறியதாய் வெறுப்புக் கொண்டிருக்கும் தற்போதைய ஜனாதிபதி பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் என்பதை எம் சமூகம் நினைவிற் கொள்ளும் போது இவரையே நம்ப முடியவில்லை இவரையா நம்புவது? என்று எம் மனங்கள் நினைப்பதிலும் நியாயம் இருக்கத் தான் செய்கிறது.
எனினும்,எம் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள நாம் சிறு முயற்சியாவது இத் தேர்தலில் எடுக்கலாம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
தற்போதைய ஜானதிபதி தலைமையிலான அரசில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப் பட அரசு பெரும் பான்மையுடன் தங்களை அசைக்க முடியாது என்ற பலத்துடன் நடை பயின்று கொண்டிருப்பதும் மிகப் பெரிய காரணங்களில் ஒன்று.தற்போதைய அரசு வீழ்ச்சியடையும் போது சிறு சிறு கட்சிகளின் பங்களிப்புடனே ஒரு அரசு தோற்றம் பெறப் போகிறது.அவ்வாறான அரசு ஒரு வலுவிக்க அரசாய் தோற்றம் பெற வாய்ப்பில்லை என்பதனால் தனது தொடர்ச்சியான பயணத்திற்கு யாவரையும் அரவனைத்து செல்லும் போக்கையே அவ் அரசு கடைப்பிடிக்க வேண்டிய நிர்ப்பத்திற்கு தள்ளப்படும்.
மேலும்,எதிரணிக் கூட்டுகள் வெற்றி பெறும் போது முஸ்லிம்களிற்கு சார்பான அரசு உருவாகாவிட்டாலும் நீதியான ஆட்சி உருவாகும் என்ற நம்பிக்கை பலரிடத்தில் உள்ளது.நினைத்த போது நினைத்ததை சாதித்துக் கொள்ள இயலுமாக இருக்கும்.இவ்வாறான அரசு உருவாகும் போது சிறு பான்மையினர் பேரம் பேசல் சக்திகளை அடிக்கடி பெற வழி சமைக்கும்.
இவ்வாறான காரணங்களினால் பொது வேட்பாளர் வெற்றி பெறுவதே முஸ்லிம்களிற்கு மிகவும் சார்பாக அமையும்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை
இலங்கை.

Post a Comment

0 Comments