Subscribe Us

header ads

அஸ்வரின் இடத்துக்கு அமீர் அலி தேசியப்பட்டியலில்; ரிஷாத்தின் ஆதரவு தொடர்ந்தும் மஹிந்தவுக்கே......


ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தன்னுடைய இராஜினாமா கடிதத்தை அவர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க திஸாநாயக்கவிடம் கையளித்துள்ளார்.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அமீர் அலி நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன. இந்நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தொடர்ந்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. 

Post a Comment

0 Comments