Subscribe Us

header ads

மைத்திரியின் கோட்டைக்கு மஹிந்த விஜயம்

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவின் தேர்தல் மாவட்டமான பொலன்னறுவைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜயம் செய்யவுள்ளார்.


சோமாவதி விகாரையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கான விஜயம் என்ற போர்வையில் இந்த பயணம் நடைபெறவுள்ளது.


ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் இந்த விஜயத்தின்போது அவர் கதுருவெல அல்லது ஹிங்குராக்கொட நகரங்களில் பொதுமக்களை சந்தித்து உரையாடவும் திட்டமிட்டுள்ளார்.


அத்துடன் ஜனாதிபதியின் விஜயத்தின் போது எதிர்க்கட்சி பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் ஆளுங்கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளனர். 


ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு தற்போது பொலன்னறுவையில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் கமாண்டோக்கள் பெருமளவில் இரவோடு இரவாக குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.


எனினும் கடைசி நேரம் வரை ஜனாதிபதியின் வருகையை இரகசியமாக வைத்திருக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்மூலம் மைத்திரிபாலவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

Post a Comment

0 Comments