ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வரை அரசியலுக்கு
கொண்டு வந்தமை முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாஸவினால்
இந்நாட்டுக்கு இழைக்கப்பட்ட மற்றுமொரு அழிவு என வர்ணித்த ஜனநாயக
தேசியக் கூட்டணி எம்.பி. யான சுனில் ஹந்துன்நெத்தி அஸ்வருக்கு
பாராளுமன்ற விவகாரமற்ற அமைச்சர் என்ற பதவியைக் கொடுத்து
பாராளுமன்றத்திற்கு வெளியில் அமரச் செய்ய வேண்டும் என்றும்
தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2015ஆம் ஆண்டுக்கான
வரவு–செலவுத் திட்டத்தின் தெரிவுக் குழுவுக்கு
ஆற்றுப்படுத்தப்பட்ட அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில்
கலந்து கொண்டு சுனில் ஹத்துன்நெத்தி எம்.பி.
உரையாற்றிக்கொண்டிருந்தார்.
இதன் போது அஸ்வர் எம்.பி. இடையூறுகளை ஏற்படுத்தினார்.
இதனையடுத்து அஸ்வர் எம்.பி.யைப் பார்த்து நீங்கள் இங்கு இடையூறுகளை
விளைவிப்பதற்குத்தான் சம்பளம் கொடுத்து உட்கார வைத்துள்ளார்கள்.
அதனை நீங்கள் மிகச் சரியாக செய்கிறீர்கள். அஸ்வர் எம்.பி.யின் இடையூறு
தொடரவே அஸ்வர் எம்.பி.க்கு பாராளுமன்ற விவகாரமற்ற அமைச்சர் பதவி
ஒன்றைக் கொடுத்து அவர் பாராளுமன்றத்தின் பக்கம் வராத வகையில்
பாராளுமன்றத்துக்கு வெளியில் ஒரு அறையை ஏற்பாடு செய்து அமரச் செய்ய
வேண்டும்.
அத்துடன் தியவன்னா ஓயாவைக் கடந்து பாராளுமன்றத்துக்கு வர முடியாதவாறு தடை விதிக்கப்பட வேண்டும்.
இதன்போது எழுந்த அஸ்வர் எம்.பி. நான் பாராளுமன்ற விவகாரமற்ற அமைச்சர்
அல்ல. உள்ளூர் துப்பாக்கிகளை அழிக்கும் அமைச்சர் எனக் கூறினார்.
இதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாச இந்நாட்டுக்கு
இழைத்த அழிவுகளில் ஒன்றுதான் அஸ்வர் எம்.பி. யை அரசியலுக்குள் கொண்டு வந்த
தாகும் என்றார்.

.jpg)
0 Comments