எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில்
நேற்றிரவு நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு
கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய
ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தற்போது காணப்படும் அரசியல்
சூழ்நிலை, ஜனாதிபதித் தேர்தலில் காணப்படும் பின்னடைவுகள் தொடர்பில்
கலந்துரையாடியதாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் கருத்து வெளியிட்ட சந்தர்ப்பத்தில்
அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கலந்துரையாடல் நள்ளிரவு 12 மணிவரையும் இடம்பெற்றதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை,
ஜனாதிபதித் தேர்தலை அறிவிப்பது தொடர்பில் அமைச்சர் கெஹலிய
ரம்புக்வெல்லவிடம் வினவியபோது, இன்றைய தினம் அதுகுறித்த அறிவிப்பு
வெளியாகும் என அவர் கூறினார்.
/ASM
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments