2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்காக,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அறிவிப்பை
எதிர்பார்த்திருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய
தெரிவித்துள்ளார்.
எனினும் தேர்தல் நிச்சயமாக ஜனவரி 2ஆம் திகதி
நடைபெறாது. ஏனெனில் அது ஒரு வெள்ளிக்கிழமை அத்துடன் பௌர்ணமி தினம் என்று
ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் தேர்தல் ஜனவரி 3ஆம், 7ஆம்
அல்லது 10ஆம் திகதிகளில் நடைபெறுமா? என்று கேட்டபோது அது கடவுளுக்கே
தெரியும் என்றும் தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
எல்லாமே, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறிவிப்பிலேயே தங்கியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
/ASM
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

0 Comments