2003-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்-6 சுற்றில் ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த இலங்கைக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்பாக நடந்த சம்பவம் இது. இதை சொல்லவே கொஞ்சம் தர்ம சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆட்டத்திற்கு முன்பாக எனக்கு திடீரென கடுமையாக வயிற்று போக்கு ஏற்பட்டது. ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தின் போது தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு அதில் இருந்து ஓரளவு தான் குணமடைந்து இருந்தேன். அதற்குள் வயிற்று கோளாறு பிரச்சினை வந்து விட்டது. இதனால் அதிகமான ‘இஸ்டோனிக்’ பானங்களை அருந்தினேன். மேலும் சக்தி அளிக்கும் பானத்துடன் உப்பு கலந்தும் குடித்து பார்த்தேன். ஆனால் வயிற்று வலி தணியவில்லை. இதனால் வேறு வழியின்றி பேட் செய்ய களம் இறங்கிய போது, எனது உள்ளாடைக்குள் ‘டிஷ்யூ பேப்பர்’ வைத்துக் கொண்டேன். ஆனாலும் களத்தில் என்னால் சவுகரியமாக செயல்பட முடியவில்லை. ஒரு குளிர்பான இடைவேளையின் போது ஓய்வறைக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
எப்படியோ இந்த ஆட்டத்தில் 97 ரன்கள் (120 பந்து) எடுத்து விட்டேன். வயிற்று வலியுடன் பேட் செய்தது மோசமான ஒரு அனுபவமாகும். எனது திறமையை குறிப்பிட்ட அளவுக்கு தான் வெளிப்படுத்த முடிந்தது. இருப்பினும் நல்ல பலன் கிடைத்தது (183 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி) மகிழ்ச்சி அளித்தது.
இவ்வாறு தெண்டுல்கர் அதில் கூறியுள்ளார்.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments