மஹிந்தவை தோற்கடிப்போம் என்ற தொனிப்பொருளில் ஜே.வி.பி. பிரசாரப் பணிகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
சட்டவிரோத ஜனாதிபதி தேர்தலுக்கு இடமளிக்க மாட்டோம் என்ற தொனிப் பொருளில் முன்னதாக பிரசாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
எனினும் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து மஹிந்தவை தோற்கடிப்போம் என்ற தொனிப்பொருளில் பிரசாரம் செய்யப்பட உள்ளது.
இது தொடர்பில் அண்மையில் ஜே.வி.பி மத்திய செயற்குழு தீர்மானம் எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சர்வாதிகார வெறியை தோற்கடிப்போம், ஜனநாயகத்திற்காக அணி திரள்வோம் போன்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் நாடு முழுவதிலும் ஒட்டப்பட உள்ளன.
எந்தவொரு கட்சியுடனும் இணைந்து கொள்ளப் போவதில்லை என ஜே.வி.பி அறிவித்துள்ளது.
எனினும், ஜே.வி.பி மேடையில் இருந்து கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக பிரசாரம் செய்யப்பட உள்ளது.
ஜனாதிபதி மஹிந்தவை தோற்கடிக்கும் வகையிலான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படும் என கட்சி அறிவித்துள்ளது.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

.jpg)
0 Comments