Subscribe Us

header ads

ஜனாதிபதியின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு காத்தான்குடியில் விஷேட துஆ பிரார்த்தனை


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு 18-11-2014நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் காத்தான்குடியில் விஷேட துஆப் பிரார்த்தனை ஒன்று இடம்பெற்றது.
காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதரமீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் செயலாளர் ஏ.எல்.எம்.அனீஸ் அஹமட் ,பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்பாளர் எம்.ஐ.நாஸர்காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சியாட்தேசிய சுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தின் தலைவர் ஏ.ஜி.எம்.றிஸ்விமீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினர்கள்உலமாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும்இலங்கை நாட்டுக்கும் ஆசி வேண்டி விஷேட துஆப் பிரார்தனை இடம்பெற்றது இதனை காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி ஏ.ஜி.எம்.அமீன் (பலாஹி) நடாத்தி வைத்தார்.
(பழுலுல்லாஹ் பர்ஹான்)

DSC 0047
DSC 0058

/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice 

Post a Comment

0 Comments