அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில், கடந்த திங்கட்கிழமை, பிரதமர் நரேந்திர மோடியை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் முதல் முறையாக சந்தித்தார். இந்நிலையில், நேற்று இங்கிலாந்து பொது சபையில், இந்திய வம்சாவளி எம்.பி. கெய்த் வாஸ், மோடியுடனான சந்திப்பு பற்றி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த டேவிட் கேமரூன், ‘பிரதமர் மோடி தெளிவான கண்ணோட்டம் கொண்டவர். குஜராத்தில் வெற்றிகரமாக செயல்படுத்திய பொருளாதார திட்டங்களை இந்தியா முழுவதும் செயல்படுத்தி வருகிறார். அவருடன் ஐரோப்பிய கூட்டமைப்பு-இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதித்தேன். அது மிக நல்ல சந்திப்பாக அமைந்தது. அவர் உலக வர்த்தக அமைப்பில், வர்த்தக ஒப்பந்தத்துக்கான முட்டுக்கட்டைகளை அகற்றினார்’ என்று கூறினார்.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

0 Comments