அம்பாந்தோட்டை மாவட்டத்தில் துறைமுகங்கள், விமான நிலையங்கள் அமைக்கின்றனர். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக அங்கு மக்கள் குடிக்க நீர் இன்றி அவதியுறுகின்றனர் என ஐ.தே.க இன் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தின் பலம் பொருந்தியவர்கள் அம்பாந்தோட்டையில் இருக்கின்றார்கள். எவ்வளவு பலம் பொருந்தியவர்கள் இருந்தாலும் பிரதேச மக்களுக்கு குடிநீர் இல்லையென்றால் அவர்களில் என்ன பயன்? அப்பாவி மக்களுக்கு பவுசர்கள் மூலம் தண்ணீர் வழங்க வேண்டியேற்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் கீழ் முதலாவதாக அம்பாந்தோட்டை மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும்.
விமானங்களில் ஏறி விடுமுறையை கழிப்பதற்கோ அல்லது கப்பல்களில் ஏறி சுற்றுலா செல்வதற்கோ உரிய விவசாயிகள் எவரும் அம்பாந்தோட்டையில் இல்லை. இந்த விவசாயிகளுக்கு குடிநீரே அவசியமாகின்றது.
இந்த மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சஜித் பிரேமதாச கோரியுள்ளார்.
அண்மையில் அம்பாந்தோட்டையில் நீர் வழங்கும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது இந்தக் குற்றச்சாட்டுக்களை சஜித் முன்வைத்துள்ளார்
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments