ஜப்பான் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் Shinzo Abe அறிவித்துள்ளார்.
ஆட்சி முடிவடைய இன்னும் இரண்டு வருட காலப்பகுதி உள்ள நிலையில் அவர் இவ் அறிவித்தலை விடுத்துள்ளதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பாக இது பேசப்பட்டு வருகிறது.
இதன்படி எதிர்வரும் 21ஆம் திகதி ஜப்பானில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
நியமிக்கப்பட்டபடி பொதுத் தேர்தலானது எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குப் பின்னரே நடத்தப்பட வேண்டும்.
இருந்த போதிலும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தகதி மற்றும் வீழ்ச்சியை சீர்செய்யும் நோக்கில் பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த இரண்டு வருடங்களுக்கு பிரதமராகப் பதவிவகித்த ஸிங்சோ அபே, வீழ்ந்துபோயுள்ள நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாக சூளுரைத்திருந்தார். எனினும் விடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற அவர் தவறிவிட்டதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த வருடத்தின் அரையாண்டில் ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகப் பொருளாதாரத்தில் மூன்றாவது தூணாக ஜப்பான் கருதப்படுகின்றது.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments