எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி நிச்சயம் என ராவய பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார். நேற்றிரவு "பீ.பீ.சி. சந்தேசய" சிங்கள செய்திச் சேவைக்கு அளித்த நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி நிச்சயிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. எனினும் தில்லுமுல்லுகள் மூலம் நூலிழை வாக்குகள் வித்தியாசத்தில் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த வெற்றிபெற்றாலும் அந்த வெற்றி நிலைக்காது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் தான் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும். அதன் பின்னர் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுவிடும்.
தற்போதைய அரசியல் சூழலில் அதுரலியே ரத்ன தேரர் அருமையான சூழ்நிலை ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது எதிர்க்கட்சிகளின் சாமர்த்தியத்தில் தங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

0 Comments