நாடு முழுவதும் எரிபொருள் விலையை சீரான மட்டத்தில் பேணுவதற்கு இன்று
முதல் அமுலுக்கு வரும் வகையில், நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது.
இதற்கமைய,
போக்குவரத்திற்காக அறவிடப்படும் கட்டணம் முழுமையாக நீக்கப்படவுள்ளதாக
கூட்டுத்தாபனத்தின் தலைவர் எஸ்.அமரசேகர குறிப்பிட்டார்.
இதற்கமைய,
நாட்டின் அனைத்து பகுதிகளிலும், கொழும்பில் விற்பனை செய்யப்படும் விலைக்கு,
எரிபொருட்களை பெற்றுக்கொள்ள முடியுமென அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இன்று முதல் அமுலுக்கு வரும்வகையில் தாரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,
ஒரு லீற்றர், 80 – 100 ரக தார் 91 ரூபாவில் இருந்து 85 ரூபாவரையும், 60 –
70 ரக தார் 92 ரூபாவில் இருந்து 86 ரூபாவரையும் விலை குறைக்கப்பட்டுள்ளதாக
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது.


0 Comments