சர்வதேச அங்கீகாரம் பெற்ற தொலைதுாரக் கல்வி நிறுவனமான AIIMAS ( All Indian Institute of Management Studies) இனால் நாடுபூராகவும் 3-5 வயதுக் குழந்தைகளை அபாரகெட்டிக்கார குழந்தைகளாக மாற்றுவதற்கான பயிற்சிகளும், உளவியல் ஆலோசனைகளும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இப் பயிற்சி வகுப்புக்கள் நாவலப்பிட்டியில் ஆரம்பிக்கப்பட்டு, இரண்டாம் கட்டமாக பசறையில் கடந்த 23-11-2014 அன்று நடாத்தப்பட்டது.
இதன் அடிப்படையில் பசறை மகாவித்தியாலயத்தில் பாலர்பாடசாலை ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், உயர்தர வகுப்பு மாணவர்களுக்கும் 3-5 வயதுக் குழந்தைகளை எவ்வாறு அபார கெட்டிக்கார குழந்தைகளாக மாற்றுவது, அவற்றிக்கு ஆசிரியர்களின், பெற்றோர்களின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் போன்ற பயிற்சிகளும், உளவியல் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் பங்கு பற்றிய பாலர் பாடசாலை ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவர்களுக்கு All Indian Institute of Management Studies கல்வி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் விரிவுரையாளர் மருதுார் ஏ. ஹசன் அவர்களினாலும் (Bsc. Psychology - Msc.Psychology ) மற்றும் ஏனைய விரிவுரையாளர்களாலும் குழந்தைகளை வழிப்படுத்துவதற்கான பயிற்சிகளும், உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மக்கள் நண்பன்
சம்மாந்துறை அன்சார்.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice








0 Comments