தான் ஆதரவு வழங்கும் குழு அதிகாரத்தை கைப்பற்றியவுடன் ராஜபக்ஷக்களின் ப(f)யில்களை வெளியில் எடுக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரனதுங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மைத்திரிபால சிறிசேன ஹொரகொல்ல பண்டாரநாயக்க சமாதிக்குச் சென்றிருந்த வேளை சந்திரிக்காவும் அங்கிருந்தபோது ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி கருத்து குறித்து கேள்வி எழுப்பிய போது அதற்கு பதிலளித்த சந்திரிக்கா குமாரதுங்க
´எங்களது ஆட்கள் வந்ததும் ராஜபக்ஷக்களின் பயில்களை இழுப்போம். இப்போதைக்கு அது போதும். இது குறித்து இனி கேள்வி கேட்க வேண்டாம்´ என தெரிவித்து அவ்விடத்தைவிட்டு சென்றுள்ளார்.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments