Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று நவம்பர் 25

1120 : இங்­கி­லாந்து மன்னன் முதலாம் ஹென்­றியின் மகன் வில்­லியம் அடெலின், பய­ணஞ்­செய்த கப்பல் ஆங்­கிலக் கால்­வாயில் மூழ்­கி­யதால் உயி­ரி­ழந்தார்.

1542 : ஆங்­கி­லேயப் படைகள் சொல்வே மொஸ் என்ற இடத்தில் ஸ்கொட்­லாந்துப் படை­களைத் தோற்­க­டித்­தன.

1667 : ஆசிய, ஐரோப்­பிய எல்­லை­யி­லுள்ள கவ்­கா­சியாப் பகு­தியில் ஏற்­பட்ட பூகம்­பத்­தினால் நிகழ்ந்த சுமார் 80,000 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1703 : பிரித்­தா­னி­யாவில் வீசிய பாரிய  சூறா­வ­ளி­யினால் 9,000 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1783 : கடைசி பிரித்­தா­னியப் படைகள் நியூயோர்க் நகரை விட்டுப் புறப்­பட்­டன.

1795 : சுதந்­திரப் போலந்தின் கடைசி மன்னன் ஸ்டனிஸ்லாஸ் ஓகஸ்ட் பொனி­யாட்­டோவ்ஸ்கி பத­வியில் இருந்து அகற்­றப்­பட்டு ரஷ்­யா­வுக்கு நாடு கடத்­தப்­பட்டார்.

1833 : இந்­தோ­னே­ஷி­யாவின் சுமத்­தி­ராவில் 8.7 ரிச்டர் அள­வி­லான பூகம்பம் ஏற்­பட்­டது.

1839 : இந்­தி­யாவில் பலத்த சூறா­வளி ஏற்­பட்­டது. ஆந்­தி­ராவின் கொரிங்கா நகரம் முற்­றாக சேத­ம­டைந்­தது. 30,000 பேர் வரையில் கொல்­லப்­பட்­டனர்.

1867 : அல்­பிரட் நோபல் டைன­மைட்­டுக்குக் காப்­பு­ரிமம் பெற்றார்.

1905 : டென்மார்க் இள­வ­ரசன் கார்ல் நோர்வே வந்து சேர்ந்தார். இவர் பின்னர் "ஏழாம் ஹாக்கோன்" என்ற பெயரில் நோர்­வேயின் மன்­ன­ரானார்.

1926 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் ஆர்­கன்சஸ் மாநி­லத்தில் இடம்­பெற்ற சூறா­வ­ளியில் 76 பேர் உயி­ரி­ழந்­த­துடன் பலர் காய­முற்­றனர்.

1936 : சோவியத் ஒன்­றியம் தம் மீது படை­யெ­டுத்தால் அதனை கூட்­டாக எதிர்­கொள்­வ­தற்கு ஜப்பான், ஜேர்­மனி ஆகி­யன  பேர்லின் நகரில் ஒப்­பந்தம் செய்து கொண்­டன.

1944 : இரண்டாம் உலகப் போரில் ஐக்­கிய இராச்­சியம், டெப்ட்ஃபோர்ட் நகரில் ஜேர்­ம­னிய விமா­னங்கள் நடத்­திய தாக்­கு­தலில் 160 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1950 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் வடக்கு கிழக்கில் ஏற்­பட்ட சூறா­வ­ளி­யினால் மேற்கு வேர்­ஜீ­னி­யாவில் 323 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1950 : மக்கள் சீனக் குடி­ய­ரசு ஐ.நா. படை­களை எதிர்க்க கொரியப் போரில் ஈடு­பட்­டது.

1973 : கிரேக்கத் தலைவர் ஜோர்ஜ் பாப்­ப­ட­ப­வுலொஸ் இரா­ணுவப் புரட்சி ஒன்றில் பதவி இழந்தார்.

1975 :  நெதர்­லாந்­திடம் இருந்து சூரினாம் சுதந்­திரம் பெற்­றது.

1981 : ரொடி­சி­யா­வி­லி­ருந்து மும்­பாய்க்குப் புறப்­பட்ட எயார் இந்­தியா விமானம்
கடத்­தப்­பட்டு தென்­னா­பி­ரிக்­காவின் டர்பன் நக­ருக்கு திசை திருப்­பப்­பட்­டது.

1987 : பிலிப்­பைன்ஸில் நீனா என்ற சூறா­வளி தாக்­கி­யதில் 1,036 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1992 : செக்­கஸ்­லோ­வாக்­கி­யாவின் நாடா­ளு­மன்றம் நாட்டை  ஜன­வரி 1, 1993 ஆம் திக­தி­யி­லி­ருந்து செக் குடி­ய­ரசு, ஸ்லவாக்­கியா என இரண்­டாகப் பிரிக்க முடி­வெ­டுத்­தது.

1999 : 1960 ஆம் ஆண்டு டொமி­னிக்கன் குடி­ய­ரசில் சர்­வா­தி­காரி ரபாயெல் ட்ருஜில்­லோவின் ஆட்­சியை எதிர்த்­த­மைக்­காக கொல்­லப்­பட்ட 3 சகோ­த­ரி­களின் நினை­வாக, பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை ஒழிப்புத் தின­மாக நவம்பர் 25 ஆம் திக­தியை ஐ.நா. பொதுச்­சபை பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யது.

2000 : அஸர்­பைஜான் தலை­நகர் பக்கு நகரில் இடம்­பெற்ற 7.0 அளவை பூகம்­பத்­தினால் 26 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2006 : சீனாவின் தென்­மேற்கு மற்றும் வடக்கு கிழக்குப் பகு­தி­களில் ஏற்­பட்ட நிலக்­கரிச் சுரங்க விபத்தில் 53 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2008 : நிஷா சூறா­வ­ளி­யினால் இலங்­கையின் வட­ப­கு­தியில் 15 பேர் பலி­யா­ன­துடன் சுமார் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். இச்சூறாவளியினால் தமிழ்நாட்டில் 184 பேர் உயிரிழந்தனர்.

2009 : சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரில் பாரிய வெள்ளம் ஏற்பட்டதால் 122 பேர் உயிரிழந்தனர். சுமார் 3000 கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.


/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

Post a Comment

0 Comments