மிச்சமுள்ள எண்ண
முடிய முன்னம்
ஆடி அசையும்
சுடர் அனைய முன்னம்
வகுப்பு பாடத்த
படிச்சிடனும்
ஒத்த வெளக்கு
வெளிச்சம் போதலன்னு
ரெண்டு வெளக்கு
நாங்க வச்சு படிக்குறம்
வெளிச்சம் போதலயோ
கண் பார்வ போதலயோ
நாங்க அறியோம்
ஒரு வேள கஞ்சியாச்சும்
எங்க ஒளப்புல
வரனுமுன்னு
மனசு நெறய ஆச மட்டும்
நெஞ்சோரம்
ஓங்கிக் கெடக்கு
எங்களுக்கு
-நுஸ்ரி இப்னு ரஹ்மதுல்லாஹ்
(25.08.2014)
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments