#வைஷாலி_மேகலை
இவ்வுலகில் பலர் மகிழ்ச்சி, நிம்மதி, அன்பு எங்கே என்று தேடி அலைகின்றனர்..
தன்னிடம் இருக்கும் இவைகளை உணர்ந்துகொள்ளாமல் மற்றவரில் தேடுகின்றனர்...
நம்மை நாம் முழுமையாக அறிந்துகொண்டால் மகிழ்ச்சி, நிம்மதி, அன்பை தேடி அலையவேண்டியதில்லை..
தன்னிடம் இருப்பதை அடையாளம் காணதெரியாமல் அடுத்தவரிடம் ஒப்படைத்து விட்டதை போல அலைகிறோம் இவ்வாழ்வில்..
தேடல்கள் முதலில் நம்மை சார்ந்தே இருக்கட்டும்...
வேறு எங்கும் தேடித்தேடி நொடிகளை, நிமிடங்களை, மணித்துளிகளை, நாட்களை, மாதங்களை, வருடங்களை ஏன் இந்த ஆயுளையே வெறுமையாக்கி கொள்ள வேண்டாம்...
நொடிகளிலிருந்து ஆரம்பமாகிறது நமது வாழ்க்கையின் வெற்றிப்படிகள்...
மகிழ்ச்சியாக ஆரம்பமாகட்டும் தேடல்கள் நமக்குள்ளேயே... வெற்றியை நோக்கி பயணிக்கட்டும்...!
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments