Subscribe Us

header ads

ஊழி­யர்­க­ளுக்கு பயிற்சி அளித்­த­மைக்­காக செலான் வங்­கிக்கு ஓமா­னி­யர்கள் பாராட்டு

ஓமான் நாட்டை தள­மாகக் கொண்­டி­யங்கும் ஆசியா எக்ஸ்­பிரஸ் எக்சேன்ஜ் நிறு­வன ஊழி­யர்­க­ளுக்­காக அண்­மையில் செலான் வங்கி ஒரு வார­கால மிக விரி­வான பயிற்சி த் திட்­ட­மொன்றை நடத்­தி­யுள்­ளது. 

இந்த விரி­வான பயிற்­சி­ய­ளித்தல் செயன்­மு­றையின்; போது - வங்­கி­யி­யலின் முக்­கிய அம்­சங்கள், பணத்தை கையாளும் நுட்­பங்கள், செலா­வணி தொழிற்­பா­டுகள், வாடிக்­கை­யாளர் கவ­னிப்பு மற்றும் சேவை போன்ற பல முக்­கிய விட­யங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தன. அத்­துடன் வாடிக்­கை­யா­ளரை அறிந்து கொள்ள (KYC) கடைப்­பி­டிக்க வேண்­டிய விதி­மு­றைகள், பண­மோ­ச­டிக்கு எதி­ரான (AML) கீழ்ப்­ப­டி­தல்கள் ஃ வழி­காட்­டல்கள், வேறு­பட்ட உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டு நாண­யத்­தாள்­களை கையா­ளுதல் மற்றும் போலி­யான நாண­யத்­தாள்­களை கண்­ட­றிதல் ஆகிய விட­யங்­க­ளிலும் பயிற்சி அளிக்­கப்­பட்­டது. 

ஆசியா எக்ஸ்­பிரஸ் எக்சேன்ஜ் நிறு­வ­னத்தின் பிரதிப் பொது முகா­மை­யாளர் லதிஸ் விசித்­திரன் தலை­மையில் 13 உறுப்­பி­னர்­களை உள்­ள­டக்­கிய இக்­கு­ழு­வினர் கொழும்பில் தங்­கி­யி­ருந்து வெளி­யேறும் இறுதிக் கட்­டத்தில்,  செலான் வங்­கியைச் சேர்ந்த வங்­கி­யியல் துறைசார் தொழில்சார் நிபு­ணர்­களால் நடத்­தப்­பட்ட விரி­வான பயிற்­சி­ய­ளித்தல் அமர்­வுகள் குறித்து முழு­மை­யான பாராட்­டுக்­களை தெரி­வித்­தனர். 

“இலங்­கைக்­கான பய­னுள்­ளதும் மறக்க முடி­யா­த­து­மான ஒரு விஜ­ய­மாக இது அமைந்­தி­ருந்­தது. நானும் எனது குழு­வி­னரும் கொழும்பில் செலான் வங்­கியின் ஊழி­யர்­களால் சிறந்த முறையில் வர­வேற்­கப்­பட்டு உப­ச­ரிக்­கப்­பட்டோம், பயிற்­சி­ய­ளித்தல் அமர்­வுகள் மிகவும் அனு­கூலம் அளிக்­கக்­கூ­டி­ய­வை­யாக காணப்­பட்­டன. நாம் பணி­யாற்றிக் கொண்­டி­ருக்கும் துறை சம்­பந்­த­பட்ட நல்ல பல முக்­கிய விட­யங்­களை இதன்­மூலம் கற்­ற­றிந்து கொண்டோம். நாம் இங்கு கற்­றுக்­கொண்­டதை எமது நாட்­டுக்கு திரும்­பி­யதும் நிச்­ச­ய­மாக எம்­மு­டைய சக ஊழி­யர்­க­ளு­டனும் பகிர்ந்து கொள்வோம்” என்று ஆசியா எக்ஸ்­பிரஸ் எக்சேன்ஜ் நிறு­வ­னத்தின் பிரதிப் பொது முகா­மை­யாளர் லதிஸ் விசித்­திரன் கூறினார். 


ஓமானில் உள்ள ஆசியா எக்ஸ்­பிரஸ் எக்சேன்ஜ் நிறு­வ­னத்தின் மனி­த­வள முகா­மை­யாளர் மொஹமட் அலி அல் கியுமி செலான் வங்­கிக்கு நன்றி தெரி­விக்­கையில், பல்­லா­யி­ரக்­க­ணக்­கான எமது வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு தங்­கு­த­டை­யற்ற சேவை­களை வழங்­கு­வ­தற்கு எமது ஊழி­யர்­க­ளுக்கு ஆற்­ற­ல­ளிக்கும் பொருட்டு அவர்­க­ளது திறன்­களை நாம் தொடர்ச்­சி­யாக தர­மேம்­ப­டுத்தி வரு­கின்றோம். இந் நிகழ்ச்­சித்­திட்டம் தொடர்பில் எமது அணி­யி­ன­ரிடம் இருந்து நான் பெற்றுக் கொண்ட அபிப்­பி­ரா­யங்கள் மிகவும் சாத­க­மாக காணப்­பட்­டன.

என­வேதான் எதிர்­கா­லத்­திலும் செலான் வங்­கி­யுடன் இணைந்து பணி­யாற்­று­வ­தற்கு நாம் எதிர்­பார்க்­கின்றோம்” என்று குறிப்­பிட்டார்.  

செலான் வங்­கியின் பிரதி பொது முகா­மை­யாளர் (சர்­வ­தேசம்) திரு. அருண ரண­சிங்க கூறு­கையில், “மத்­திய கிழக்கு நாடு­களில் அதிலும் குறிப்­பாக ஓமானில் மிகப் பெரி­யதும் தொடர்ச்­சி­யாக அதி­க­ரித்துச் செல்­வ­து­மான வாடிக்­கை­யாளர் தளத்தை நாம் கொண்­டுள்ளோம்.


என­வேதான் ஆசியா எக்ஸ்­பிரஸ் எக்சேன்ஜ் நிறு­வ­னத்­திற்கு வச­தி­ய­ளிக்கும் முக­மாக, எம்­மி­ட­முள்ள நிபு­ணத்­து­வத்­தையும் எவ்­வாறு பணி­யாற்­று­வது எனும் வழி­வ­கை­யையும் அவர்­க­ளுடன் பகிர்ந்து கொள்­வது முக்­கி­ய­மா­னது என்று நாம் உணர்ந்தோம். இதன்­மூலம் மேலும் நெறிப்­ப­டுத்­தப்­பட்ட சேவைகள் கிடைப்­பது உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­வ­துடன், ஓமான் நாட்டில் உள்ள பல்­லா­யி­ரக்­க­ணக்­கான எமது வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு அது அனு­கூ­ல­மா­கவும் அமையும் என்று தெரி­வித்தார். 

/JAH


கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice      

Post a Comment

0 Comments