ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ள ஐ.பி.எல். என்னும் 20 ஓவர் கிரிக்கெட்
போட்டியில் கடந்த ஆண்டு சூதாட்டம் நடைபெற்றதாக வெளியான தகவல்கள் நாடு
முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதில் முன்னணி கிரிக்கெட் வீரர்கள்
ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சாண்டிலா மற்றும் தரகர்கள் சிக்கினர்.
அந்த 3 கிரிக்கெட் வீரர்களும் கைது செய்யப்பட்டனர். பின்னர் பிணையில் விடுதலை ஆனார்கள். அவர்களுக்கு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கில், டெல்லி நீதிமன்றில் கடந்த ஆண்டு ஜூலை 30-ந் திகதி 6 ஆயிரம் பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்தியாவில் கிரிக்கெட் சூதாட்டம், மும்பை நிழலுலக தாதாக்கள் தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அவர்களை கைது செய்ய ஏற்கனவே பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் இந்தியாவில் இல்லை என்பதால் கைது செய்ய இயலவில்லை என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கிரிக்கெட் சூதாட்ட வழக்கு டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் புலன் விசாரணை நடத்தி வரும் டெல்லி பொலிஸ் தனிப்படையினர், “மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில், தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல் ஆகியோரின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. அவர்கள் 1993-ம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவில் இல்லை.
தாவூத் இப்ராகிமுக்கு மும்பை டோங்க்ரியிலும், சோட்டா ஷகீலுக்கு மும்பை நாகபாதாவிலும் சொத்துகள் உள்ளன. அவர்களைப்பற்றி அக்கம்பக்கத்தினரிடம் விசாரிக்கப்பட்டது. அவர்கள் இங்கு வரவே இல்லை என்று கூறினர்” என தெரிவித்தனர்.
இதையடுத்து தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீலை தேடப்படும் குற்றவாளிகளாக நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா அறிவித்தார். சண்டிகாரை சேர்ந்த சந்தீப் சர்மாவும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 14-ந் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

0 Comments