Subscribe Us

header ads

கற்பிட்டி புத்தளம் இ.போ.ச. பஸ் சேவையின் தாமதம் குறித்து பயணிகள் விசனம்


புத்தளம் நகரில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அழகிய சுற்றுளாத்தளம் கற்பிட்டி நகரம். புத்தளத்தில் இருந்து கற்பிட்டிக்கு தனியார்துறை பேரூந்துகளும், இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்துகளும் பயணிகளின் பாவனைக்காக செயற்படுவது யாவரும் அறிந்ததே.
புத்தளம், கற்பிட்டிக்கான 45 கிலோமீட்டர் தூர பயணத்திற்காக இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சேவைகள் 2 ½ மணித்தியாலம் எடுப்பது தொடர்பாக பயணிகள் தமது அசௌகரியங்களையும் முறைப்பாட்டையும் தெரிவித்துள்ளனர். பாலாவியில் இருந்து கற்பிட்டி வரை காபட் வீதி இடப்பட்ட பின்னர் சிறந்தொரு போக்குவரத்து சேவை கிட்டும் என எதிபார்த்த தினசரி பயணிகள் விசடமாக அரச சேவை ஊழியர்கள் இன்று தமது ஏமாற்றத்தை (தொடரும் தாமதமான பஸ் சேவையை)கண்டு அங்களாய்க்கின்றனர்.
கற்பிட்டியில் அரச அலுவலகங்களில், வங்கிகளில் பாடசாலைகளில் பணி புரியும் அரச உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், தினசரி வியாபாரிகள்  மற்றும் நோயாளிகள் என பலர் இதனால் பதிப்படைகின்றனர்.
கற்பிட்டியில் அரச அலுவலகங்களில், வங்கிகளில் பாடசாலைகளில் பணி புரியும் அரச உத்தியோகத்தர்கள் 50 க்கு அதிகமானவர்கள் இணைந்து இது தொடர்பான முறைப்பாட்டை “ கற்பிட்டி அபிவிருத்தி குழு” வுக்கு வழங்கியுள்ளனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள புத்தளம் இலங்கை போக்குவரத்து சபையின் பொறுப்பதிகாரி D.P.V மடவாள அவர்கள் “புத்தளம், கற்பிட்டிக்கான பஸ் சேவைகள் 45 கிலோமீட்டர் தூர பயணத்திற்காக 1 மணித்தியாலம் 45நிமிடங்கள் மாத்திரம் வழங்கி உள்ளதாகவும் அதற்கு மேல் நேரமெடுத்தால் ஓட்டுனர்கள் சட்டநடவடிக்கைக்கு முகம்கொடுக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளார். மேலும் வழங்கப்பட்டுள்ள கால நேரதிர்ற்குள் பயண எல்லையை இ.போ.ச. பஸ்கள் அடைவதால் தனியார்துறை பஸ் ஓட்டுனர்களுக்கும் இ.போ.ச. பஸ் ஓட்டுனர்களுடன் பல சந்தர்ப்பகளில் பிரச்சினைகள் எற்படுத்தியுள்ளனர். இது தொடர்ப்பாக 8 போலீஸ் முறைபாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அவற்றில் ஒன்று நீதிமன்றம் வரை சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தனியார்துறை பஸ் ஓட்டுனர்களை விட இ.போ.ச. பஸ் ஓட்டுனர்கள் பிரயாணத்திற்காக அதிகமான நேரத்தை எடுப்பதாகவும், இத்தகைய பஸ் ஓட்டுனர்களின் தாமதம் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தானியார் பஸ் ஓட்டுனர் பிரசன்ன ஹேவா அவர்கள் கூறினார்.

செய்தி மூலம். දිනමිණ 
தமிழில்: Samsham Shafeek

Post a Comment

0 Comments