ஆமினா லாத்தா தன் வீட்டு வறுமை காரணமாக தாஜ்மஹால் பீடிய குடிச்சிக்கிட்டு, செக்குமாடு போல சும்மா சுத்திச் திரிஞ்ச தன் கணவரை வட்டிக்கு கடன் வாங்கி கட்டாருக்கு அனுப்பி வைக்கிறாள்.
கட்டாரு சென்ற அந்த சொறனகெட்ட ஆமீனா லாத்தாட கணவர் தன் இஷ்டத்துக்கு கட்டாரில் ஆட்டம் போட்டுத்திரிகிறார். ஆமீனா லாத்தாவுக்கு காசு அனுப்புவதில்லை, கோல் எடுத்துக் கூட பேசுவதில்லை, ஒரு புடவ கூட அனுப்பி வைப்பதில்லை ஆனால் இவர் மட்டும் கையில ஒரு ஐபோன் வைத்துக் கொண்டு, சிகரட் பெட்டி பெட்டியாய் வாங்கி அடித்துக் கொண்டு வெட்டி பந்தா காட்டிக் கொண்டு கட்டார சுத்தி சுத்தி திரிகிறாரு.
தன்னுடைய கஷ்டங்களையும், தன் கணவர் தன்னையும், குழந்தையையும் கைவிட்டதையும் பௌசியா லாத்தாவிடம் ஆமினா லாத்தா சொல்லிச் சொல்லி ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார். இதனைக் கேட்ட பௌசியா லாத்தா ஆமினா லாத்தாவைப் பார்த்து,
”அவன் திரும்ப வளவுக்க வந்தா அவன செருப்பால அடிடி” என சொல்லிச் சென்றா.
வெளிநாடுகளில் சில பேர் என் கவிதையில் கூறிய ஆமினாவின் கணவரைப் போல் தன் குடும்பத்தை கவனியாது இங்கே வெட்டி பந்தா காட்டிக் கொண்டு ஆடம்பரமாக வாழ்வதை வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இவர்கள் தங்களது வெட்டி பந்தா வாழ்க்கைகளை கைவிட்டு விட்டு உங்களையே நம்பி இருக்கும் உங்கள் குடும்பம், மனைவி, பிள்ளைகளையும் கவனித்துப் பார்க்க வேண்டும்.
மக்கள் நண்பன்
சம்மாந்துறை அன்சார்
சம்மாந்துறை அன்சார்
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் .
https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments