Subscribe Us

header ads

வரவு செலவுத்திட்டத்தில் அச்சுப்பிழைகள்: ஏற்றுக்கொள்ளும் இலங்கை அரசு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பத்தாவது வரவு செலவுத்திட்டத்தில், பல அச்சுப்பிழைகள் காணப்பட்டமையை பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஜனநாயகக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இந்த அச்சுப்பிழைகள் குறித்து நேற்று நாடாளுமன்ற அமர்வின் போது சுட்டிக்காட்டியிருந்தார்.

இதன்போது பதிலளித்த அமைச்சர் அமுனுகம, வரவு செலவுத்திட்டத்தின் அரச நிறுவனங்களுக்கான ஐந்தொகையில் கணக்கீட்டு தொகைகள் பிழையாக அச்சிடப்பட்டுள்ளன என்பதை ஏற்றுக்கொண்டார்.

இலங்கை வங்கிக்கான 5000 மில்லியன் ரூபாய்கள் என்பது 5000 பில்லியன் என்று பிழையாக அச்சிடப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மூன்று மொழிகளிலும் அச்சிடப்பட்டுள்ளது.

எனினும் வரவு செலவுத்திட்ட சுருக்கம் ஆங்கிலத்தில் மாத்திரமே அச்சிடப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments