பி. முஹாஜிரீன்
அட்டாளைச்சேனை விவசாய விரிவாக்கல் காரியாலயம் மற்றும் ‘RGHMJ’ இளம் விவசாயிகள் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த மகா போக விவசாயக் கண்காட்சியூம் விற்பனையூம் 2014/2015ம் நிகழ்வூ அட்டாளைச்சேனை உதவி விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (25) சனிக்கிழமை நடைபெற்றது.
விவசாய விரிவாக்கற் உத்தியோகத்தர் ஏ.எச்.ஏ. முபாறக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அதிதிகளாக அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ்இ உதவி விவசாயப் பணிப்பாளர் ஏ.எல். சனீர் ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியையூம் விற்பனையையூம் ஆரம்பித்து வைத்தனர்.
விவசாயத் திணைக்களத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விதை நெல் இனங்கள்இ பயிர் விதைகள் மற்றும் கிருமி நாசினிகள் போன்றவை இங்கு காட்சிப்படுத்தப்பட்டதோடு விவசாயிகளுக்கு புதிய தொழிநுட்ப ரீதியிலான மாதிரி செய்முறை விளக்கங்களும் அளிக்கப்பட்டன.
இதில் அம்பாறை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்குபற்றியதுடன் விவசாயிகளும் பெரும் பயன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் .
https://www.facebook.com/kalpitiyavoice








0 Comments