றிலங்காவுக்கான விமான சேவையை நிறுத்தப் போவதாக பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.
இதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் விமான சேவையை நிறுத்திக் கொண்டமைக்காக பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
சிறிலங்காவுக்கான தமது விமான பயணங்களை இரத்துச் செய்ததில் அரசியல் பிரச்சினைகள் எதுவும் காரணமில்லை. இலாபம் தொடர்பான பிரச்சினை காரணமாகவே விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அடுத்தாண்டு முதல் சிறிலங்காவுக்கான தமது விமான சேவைகள் இரத்துச் செய்யப்படும் என பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்தது.
அந்த நிறுவனத்தினால் விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டமைக்கு அரசியல் காரணங்கள் இல்லையென பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனத்தின் தெற்காசிய பிராந்திய முகாமையாளர் கிறிஸ்டோபர் ஃபோர்டைஸ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் மனித உரிமை நிலைமைகளுடன் தொடர்புப்படுத்த சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் முயற்சித்துள்ளன. எனினும் அவ்வாறு இல்லை.
இலாபம் பிரச்சினை காரணமாகவே கொழும்பு மற்றும் லண்டன் இடையிலான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வணிக நோக்கத்தின் அடிப்படையிலேயே பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் உலகம் முழுவதிலும் உள்ள நகரங்களுக்கு தனது விமான சேவைகளை நடத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.


0 Comments