Subscribe Us

header ads

சட்டவிரோத கசிப்பு விற்பனை நிலையமொன்றை வளைத்த போலீசாருக்கு மரத்தில் கட்டிவைத்த தாக்குதல் - ஆரச்சிகட்டுவ

சட்டவிரோத கசிப்பு விற்பனை நிலையமொன்றை சுற்றிவளைப்பதற்காக சிவில் உடையில் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவரைப் பிடித்து, மரத்தில் கட்டிவைத்த தாக்குதல் நடத்திய சம்பவமொன்று சிலாபம், ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருமே இவ்வாறு மரத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தை அடுத்து அவ்விடத்துக்கு விரைந்த சிலாபம் பொலிஸ் குழுவொன்று, சந்தேகநபர்களைத் தாக்கி, மரத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவரையும் மீட்டதுடன் அவர்களை வைத்தியசாலையிலும் அனுமதித்தனர்.


அத்துடன், பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளான சந்தேகநபர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.



Post a Comment

0 Comments