Subscribe Us

header ads

அன்னியவர்களுடன் கைலாகிற்காய் நிர்பந்திக்கப்படும் முஸ்லிம் ஆண்கள்,பெண்கள்..!!


(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)
இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டவர்களைத்(மஹ்ரமி) தவிர ஒரு ஆணைப் பெண்ணோ,பெண்ணை ஆணோ தொடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை.எனினும்,சில சந்தர்ப்பங்களில் எமது பெண்கள்,ஆண்கள் கைலாகின் போது அன்னிய ஆணின்,பெண்ணின்  கையை தொடுவதற்கு நிர்ப்பந்திக்கிறார்கள்.
கடந்த வெள்ளிக் கிழமை நேத்ரா அலை வரிசையில் 6 மணி அளவில்  ஒளிபரப்பான ஒரு வினா விடை போட்டியை பார்த்துக் கொண்டிருந்தேன் அப்போது அந் நிகழ்வில் முஸ்லிம் பெண்கள் கலந்து கொண்டனர்.இறுதி பரிசளிப்பின் போது அம் மாணவிகள் அங்கு அதிதியாக கலந்து கொண்டவருடன் விருப்பம் இன்றி கைலாகு செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டதை பார்க்க முடிந்தது.
வருகின்ற அதிதிகள் கைலாகிற்காய் கையை நீட்டும் போது நாம் கை கொடுப்பதை தவிர்த்தால் எங்கே?அவர்களை அவமானப் படுத்துவது போன்று அமைந்து விடுமோ என்ற காரணத்தால்  இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது எமது பெண்கள்,ஆண்கள்  அன்னிய ஆண்,பெண்ணுடன்  கைலாகிற்காய்  நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள்.
இஸ்லாத்தை புறக்கனித்துத்தான் ஒருவருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்றால் அவ்வாறான மரியாதையை நாம் அவருக்கு வழங்கத்தானா வேண்டும்??நாம் சற்று விட்டுக் கொடுப்புடன் செயற்ப் படுவோமாக இருந்தால் எதிர் காலத்திலே அவ் விடயம் ஒரு சாதாரண சிறிய விடயமாக மாறி விடும்.
ஏன் நாம் இதனை எமது அஹ்லாக்கை மக்களுக்குப் வெளிக் காட்டும்  ஒரு அழகிய சந்தர்ப்பமாக பாவிக்கக் கூடாது?
பிரஞ்ச் அமைச்சர் லாரண்ட் பபியாஸ் அபு தாபி சென்ற போது அபு தாபி முஸ்லிம் மாணவி ஒருவரிடம் கைலாகிற்காய் கையை நீட்டி இருந்தார்.அப்போது அம் மாணவி கைலாகிற்கு  மறுத்து தனது அஹ்லாக்கை வெளிப்படுத்தி இருந்தார்.
இனி இந்த அமைச்சர் எந்த முஸ்லிம் பெண்ணிடமாவது கைலாகிற்காய் கையை நீட்டுவாரா?நாம் சற்றேனும் விட்டுக் கொடுப்பின்றி இவ்வாறு செய்யும் போது பலரிற்கு இது படிப்பினையாக மாறும்.ஆடைக் கலாச்சாரம் அழுக்குக் காலாச்சாரமாய் மாறிக் கொண்டிருக்கும் இக் காலத்தில் இஸ்லாத்தின் பால் உலக மக்களை ஈர்க்க இது ஏதுவான சந்தர்ப்பமாக அமையுமல்லவா?
இவ்வாறன சந்தர்ப்பங்களின் வெறுமனே கை கொடுக்க மறுப்பதை விட போது கையை நெஞ்சில் வைத்து தலையை சற்று அசைப்பது சிறப்பாக அமையும்.தலையை  கீழே பணித்து அடிபணிவது போன்றல்ல என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
ஆண்கள் பெண்களிடம் கைலாகு செய்வது இன்று சாதாரணமாக மாறி வருகிறது.பெண்கள் ஆணிடம் கொடுப்பதைத் தான் இன்று தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆண் பெண்ணிடமோ,பெண் ஆணிடமோ தொடுதலை ஏற்படுத்துவது சமமான பாவம் என்பதை எமது சமூகம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
"எமது செயல்கள் அனைத்தும் எமது எண்ணத்தைக் கொண்டே"என இச் செயலை  நியாயம் கற்பிக்க விளைபவர்களும் உண்டு.அவரை அவமானப் படுத்தக் கூடாது என்பதற்காய் நாம் கைலாகு செய்ய  செல்வதற்கும் அவர் அழைக்கும் போது விபச்சாரம் செய்ய செல்வதற்குமிடையில் என்ன தான் வேறு பாடு உள்ளது?
குறிப்பு:யாரினது மனதையும் புண்படுத்தும் நோக்கில் இக் கட்டுரை அமைக்கப் பட வில்லை.  

Post a Comment

0 Comments