சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று இடம் பெறுகின்றன.
தசரா விடுமுறை முடிவடைந்ததையடுத்தே இன்று மீண்டும் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில் ஜெயலலிதாவின் பிணை மனுக்கள் மீது விசாரணை இடம்பெறுகிறது.
தமிழக முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா சசிகலா சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் கடந்த மாதம் 27- ஆம் தீர்ப்பு வழங்கப்பட்டு ஜெயலலிதா உட்பட 4நால்வருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அவர்கள் பரப்பன, அக்ரஹாரா சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஜெயலலிதா உள்பட 4 பேர் சார்பிலும் தீர்ப்பை எதிர்த்து பெங்களுர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும், ஜாமீன் வழங்க வேண்டும் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
0 Comments