காவியுடையக் களைந்து பயணப் பொதியில் வைத்துவிட்டு காற்சட்டையு டன் வானொன்றில் பெண்ணொருவருடன் உல்லாசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபருட்பட இருவரை தலாத்துஓயா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தலாத்து ஓய, ஹாரகம, பழைய ஆற்றோர வீதியில் வைத்தே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வேனிலிருந்த பயணப்பொதியை பொலிஸார் சோதனையிட்ட போது கைது செய்யப்பட்ட இருவர் சந்தேகிக்கப்படும் காவியுடைகளும் மற்றும் பிக்குகள் பாவிக்கும் பொருட்களும் இருந்துள்ளன.
கண்டி மற்றும் களனிய பிரதேசங்களுடன் தொடர்புடைய இந்த இருவரையும் கைது செய்தபோது அவர்களிடமிருந்து கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை நேற்று 6 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
0 Comments