Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று... ஒக்டோபர் 07

1690 : ஆங்­கி­லேய படைகள் கன­டாவின்  கியூபெக் நகரைத் தாக்­கின. 


1737 : இந்­தி­யாவின் வங்­கா­ளத்தில் ஏற்­பட்ட சூறா­வ­ளி­யினால் சுமார் 300,000 பேர் இறந்­த­தாக மதிப்­பி­டப்­பட்­டது.

1769 : பிரித்­தா­னிய  நாடுகாண் பயணி கெப்டன் ஜேம்ஸ் குக் நியூ­ஸி­லாந்தைக் கண்­டு­பி­டித்தார்.

1806 : பிரிட்­டனைச் சேர்ந்த ரால்ஃப் வெட்ஜ்வூட் என்­ப­வரால் கார்பன் தாள் காப்­பு­ரிமம் பெறப்­பட்­டது. 

1840 : இரண்டாம் வில்­லியம் நெதர்­லாந்தின் மன்­ன­ராக முடி­சூ­டினார். 

1916 : அமெ­ரிக்­காவின்  கம்பர் பல்க­லைக்­க­ழ­கத்­து­ட­னான கூடைப்­பந்­தாட்டப் போட்­டியில் ஜோர்­ஜியா டெக் கல்­லூரி 222:0 விகி­தத்தில் வென்­றது. அமெ­ரிக்க வர­லாற்றில் மிக ஒரு­பக்கச் சார்­பாக அமைந்த கூடைப்­பந்­தாட்டப் போட்டி இது.

1919 : நெதர்­லாந்தின் கே.எல்.எம். விமா­ன­சேவை ஆரம்­பிக்­கப்­பட்­டது. 

1940 : இரண்டாம் உலகப் போரில் ருமே­னி­யாவை ஜேர்­மனி  தாக்­கி­யது. 

1942 : ஐக்­கிய நாடுகள் சபையை  ஆரம்­பிக்கப் போவ­தாக அமெ­ரிக்கா மற்றும் பிரித்­தா­னியா அறி­வித்­தன. 

1944 : இரண்டாம் உலகப் போரில் நாசி­களின் அவுஷ்விட்ஸ் வதை முகாமில் யூதக் கைதி­களின் கிளர்ச்சி இடம்­பெற்­றது. 

1949 : ஜேர்மன் ஜன­நா­யகக் குடி­ய­ரசு (கிழக்கு ஜேர்­மனி) உரு­வாக்­கப்­பட்­டது. 

1950 : திபெத்து மீதான தாக்­கு­தலை சீனா  ஆரம்­பித்­தது. 

1958 : பாகிஸ்தான் ஜனா­தி­பதி இஸ்­காண்டர் மிர்ஸா, ஜெனரல் அயூப் கான் ஆத­ர­வுடன் 1956 அர­ச­மைப்பை நிரா­க­ரித்து இரா­ணுவ ஆட்­சியை ஏற்­ப­டுத்­தினார்.

1959 : சோவியத் விண்­கலம் லூனா 3 சந்­தி­ரனின் அதி தொலை­வி­லுள்ள பகு­தி­களின் புகைப்­ப­டங்­களை முதல் தட­வை­யாக பூமிக்கு அனுப்­பி­யது. 

1962 : சோவியத் ஒன்­றியம் நோவயா சிம்­லியா என்ற இடத்தில் அணுக்­கரு சோத­னையை நிகழ்த்­தி­யது. 

1963 : ஹெயிட்டி மற்றும் டொமி­னிக்கன் குடி­ய­ரசு ஆகி­ய­வற்றை சூறா­வளி  தாக்­கி­யதில் 7,190 பேர் கொல்­லப்­பட்­டனர். 

1984 : காத்­தான்­கு­டியில் பிறந்து, செய்­னம்பு நாச்­சியார் மான்­மியம் உட்­பட பல நூல்­களை எழுதி புகழ்­பெற்ற கவிஞர் திலகம் அப்துல் காதர் லெப்பை கால­மானார். 

1987 : இந்­தி­யா­வி­லி­ருந்து "காலிஸ்தான்" சுதந்­திரம் பெறு­வ­தாக பஞ்­சாப்பின் சீக்­கிய தேசி­ய­வா­திகள் பிர­க­டனம் செய்­தனர். அது சர்­வ­தேச ரீதி­யாக அங்­கீ­க­ரிக்­கப்­ப­ட­வில்லை.

2001 : ஆப்­கா­னிஸ்தான் மீதான அமெ­ரிக்­காவின் படை­யெ­டுப்பு  ஆரம்­ப­மா­கி­யது.

2003: ஆஸ்­தி­ரி­யாவில் பிறந்த ஹொலிவூட் நடிகர் ஆர்னோல்ட் ஷ்வார்ஸ்­நெகர் - அமெ­ரிக்­காவின் கலி­போர்­னியா மாநில ஆளு­ந­ருக்­கான தேர்­தலில், வெற்றி பெற்றார்.

2004 : கம்­போ­டி­யாவின் நொரொடொம் சிஹானூக், மன்னர் பத­வியில் இருந்து விலகினார்.

Post a Comment

0 Comments