Subscribe Us

header ads

சிரிய எல்லைப் பிராந்திய நகரில் ஐ.எஸ். போராளிகள் உக்கிர தாக்குதல்

சிரிய எல்லைப் பிராந்திய நகரான கோபேனில் ஞாயிற்றுக்கிழமை உக்கிர மோதல் இடம்பெற்றுள்ளது.

அந்நகரை இலக்கு வைத்து ஐ.எஸ். போராளிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு அமெரிக்க வான் தாக்குதல்களின் துணையுடன் குர்திஷ் போராளிகள் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 
ஐ.எஸ். போராளிகள் சனிக்கிழமை இரவு அந்நகருக்கு அண்மையிலுள்ள குன்றுப் பகுதியை கைப்பற்றியுள்ளதாகவும் ஆனால் அமெரிக்கா மற்றும் அரபு நேச நாடுகளின் புதிய தாக்குதல்களால் அவர்களது முன்னேற்றம் பின்னடைவிற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
ஐ.எஸ். போராளிகளுக்கு எதிரான சர்வதேச நாடுகளின் போருக்கான முக்கிய மோதல் களமாக துருக்கிய எல்லைக்கு அண்மையிலுள்ள கோபேன் நகர் மாறியுள்ளது.
 
ஐ.எஸ். போராளிகள் தாம் பிரித்தானிய பணயக் கைதியான அலன் ஹென்னிங்கை படுகொலை செய்வதை வெளிப்படுத்தும் பிந்திய வீடியோ காட்சியை வெளியிட்டதையடுத்து உலகளாவிய ரீதியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
 
இந்நிலையில் ஐ.எஸ். போராளிகள் தம்மால் பணயக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்க தொண்டு நிறுவன பணியாளரான பீற்றர் கஸிக்கை கொல்லப்போவதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
 
ஐ.எஸ். போராளிகள் சனிக்கிழமை இரவு மிஷ்ரினூர் குன்றின் ஒரு பகுதியை கைப்பற்றியுள்ளதாக சிரிய மனித உரிமைகள் அவதான நிலையத்தின் பணிப்பாளர் ரமி அப்டெல் ரஹ்மான் தெரிவித்தார்.
 
கோபேனில் சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 33 ஐ.எஸ். போராளிகளும் 23 குர்திஷ் படை வீரர்களும் பலியாகியுள்ளதாக அவர் கூறினார்.

நன்றி : VK
/JAH

Post a Comment

0 Comments