இன்சியோன் நகரின் யொன்ஹுயி விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆசியான் 2014 விளையாட்டுப் போட்டிகளில் 68 ஓட்டங்களில் இலங்கை கிரிக்கட் அணி தங்கப் பதக்கத்தை சுவிகரித்துக்கொண்டது. 12 வருடங்களின் பின் ஆசியான் விளையாட்டுப் போட்டியில் இலங்கை பெற்ற தங்கப் பதக்கம் இதுவாகும்.
2014.10.03-ம் திகதி நடைபெற்ற Twenty20 கிரிக்கட் போட்டியில் லஹிரு திரிமான்ன தலைமையிலான இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றியீட்டியது. இப்போட்டியின்போது 2,500 பார்வையாளர்களை உள்ளடக்கக் கூடிய யொன்ஹுயி அரங்கு நிறைந்து காணப்பட்டது.
ஆசியான் விளையாட்டுப் போட்டியில் இலங்கை பெற்ற முதலாவது தங்கப் பதக்கம் 2002-ம் ஆண்டு பூசான் நகரில் சுசந்திகா ஜயசிங்க 100 மீ. பெண்கள் குறுந்தூர ஓட்டப்போட்டியிலும் தமயந்தி தர்ஷா 400 மீ. பெண்கள் ஓட்டப் போட்டியிலும் பெற்றனர்.
/Az
0 Comments