Subscribe Us

header ads

பிக்குமாருக்கு அரசாங்கத்தின் காடையர்கள் சானம் அடித்தனர்

பௌத்த பாலி பல்கலைக் கழகத்தின் மாணவ பிக்குமாரின் அமைதி போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குமாருக்கு அரசாங்கத்தின் காடையர்கள் 2014.10.01-ம் திகதி இரவு மாட்டுச் சானம் அடித்துள்ளனர். இத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 02-ம் திகதி காலை 7.30 மணிக்கு ஹோமாகம பிடிபன சந்தியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இத் தாக்குதல் நடைபெறும் போது அமைதி போராட்டத்தின் பாதுகாப்புக்கு என பொலிசாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
'அரசாங்கத்தின் மாடுகள் சிவுர அங்கிக்கு சானம் அடிக்குது' என எழுதப்பட்டுள்ளது. 
மாணவர் விடுதி வசதிகள் உட்பட பத்து கோரிக்கைகளை முன்வைத்து ஸ்ரீ லங்கா பௌத்த பாலி பல்கலைக் கழக மாணவ செயற்பாட்டாளர் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதி போராட்டத்திற்கு இன்றுடன் 19 நாட்கள் நிறைவடைந்துவிட்டது.
இதற்கு சில தினங்களுக்கு முன் ஹோமாகம பிரதேச சபை தலைவர் அமைதிப் பேராட்டத்தில் ஈடுபட்ட பிக்குமாரை ஏசி அச்சுருத்தியுள்ளார்.
சானம் அடிக்கப்பட்ட பிக்குமார்
நன்றி: Lanka True News
/Az


Post a Comment

0 Comments