Subscribe Us

header ads

விராத்துவுக்கு எதிராக விரலையும் தூக்க முடியாது - இணையத்தளம் முடக்கப்பட்டது

மியன்மாரின் பிரபல இணையத்தளம் ஒன்று வியாழக்கிழமை (2014.10.02)-ம் திகதி சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது
இராவட்டி irrawaddy என்ற இந்த இணையத்தளம் பிரசுரித்திருந்த தலைப்புக் காரணமாகவே அதன்மீது ஊடுருவல் நடத்தப்பட்டதாக ஏ.எப்.பி வெளிநாட்டுச் செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது. ஊடுருவலாளர்கள் தம்மை 'Blink Hacker Group' என அடையாளப்படுத்தியுள்ளனர். 
குறித்த இணையத்தளத்தில் இலங்கைக்கு சென்றிருந்த பௌத்த பிக்குவான விராது தேரரும் இலங்கையின் பொதுபல சேனாவும் சந்திப்பு நடத்திய செய்திக்கு இனவாதம் என்ற தலைப்பு இடப்பட்டிருந்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.



இந்தநிலையில் இராவட்டி இணையத்தளம் முஸ்லிம்களுக்கு சார்பானது என்றும், அது ஜிகாத்துக்கு ஆதரவளிப்பதாகவும் ஊடுருவலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதேநேரம், ரங்கூனில் இயங்கும் இதன் அலுவலகம் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: dailyceylon
/Az

Post a Comment

0 Comments