இலங்கையில் பாடசாலை களுக்கான காகிதாதிகள் உற்பத்தி யில் ஈடுபடும் முன்னணி நிறுவனமான அற்லஸ், பிரபல்யமான நிமெக்ஸ் வர்த்தக நாமத்தை தன் வசப்படுத்தியுள்ளது. உயர் தரம் வாய்ந்த tissue தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் நிமெக்ஸ் வர்த்தக நாமம், அற்லஸ் நிறுவனத்தின் விஸ்தரித்துச் செல்லும் தயாரிப்புகளின் பிந்திய உள்ளடக்கமாக அமைந்துள்ளது.
தனது பிரதான வர்த்தக செயற்பாடுகளுடன் தொடர்புடைய வகையில் நிமெக்ஸ் நாமத்தை கம்பனியானது உள்வாங்கியிருந்தது. நிலையான வளர்ச்சி பாதையில் தன்னை பதிவு செய்து கொண்டு, உறுதியான செயற்பாட்டையும் முன்னெடுத்து வருகிறது.
சிலோன் பென்சில் கம்பனி (பிரைவேற்) லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் நிர்மல் மதநாயக்க கருத்து தெரிவிக்கையில், “விருந்தோம்பல் துறையில் ஏற்பட்டு வரும் விஸ்தரிப்பு, நுகர்வோரின் மாறிவரும் வாழ்க்கைத்தரம் மற்றும் வருமான அளவுகளின் அதிகரிப்பு போன்றன பாவனையின் பின்னர் இலகுவாக அழிக்கக்கூடிய இதுபோன்ற பொருட்களுக்கு மத்திய கால அடிப்படையில் சிறந்த வளர்ச்சி காணப்படும். இந்நிலையில் நிமெக்ஸ் போன்ற வர்த்தக நாமங்களை கையகப்படுத்தியுள்ளமையானது, அற்லஸ் வர்த்தக நாமத்துக்கு தனது பிரதான வர்த்தக செயற்பாட்டை மேலும் உறுதி செய்ய ஏதுவாக அமைந்திருக்கும்” என்றார்.
பட விளக்கம்: சிலோன் பென்சில் கம்பனி (பிரைவேற்) லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் நிர்மல் மதநாயக்க மற்றும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்டீவன் என்டர்பி ஆகியோர் உடன்படிக்கை கைச்சாத்திடல் நிகழ்வில் காணப்படுகின்றனர்.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

0 Comments