Subscribe Us

header ads

இலங்கையின் முன்னணி லோயல்டி திட்டமான Nexus மூலம் Nexus மொபைல் அறிமுகம்

300,000க்கும் அதி­க­மான அங்­கத்­த­வர்­களை கொண்ட அதி­க­ளவு வர­வேற்பை பெற்ற லோயல்டி திட்­ட­மான Nexus, கீல்ஸ் சுப்பர் மற்றும் நாட்டின் முன்­னணி நிறு­வ­னங்கள் பல­வற்­றி­னூ­டாக பல்­வேறு விசேட அனு­கூ­லங்­களை வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்கி வரு­வ­துடன், தனது அங்­கத்­த­வர்­க­ளுக்கு தற்­போது Nexus மொபைல் எனும் புதிய தீர்­வையும் அறி­முகம் செய்­துள்­ளது. 

சகல அங்­கத்­த­வர்­களும் தற்­போது விலைக்­க­ழி­வுகள் மற்றும் விசேட தள்­ளு­ப­டி­களைக் கொண்ட Nexus அனு­கூ­லங்­களை பாரம்­ப­ரிய அட்­டையை வழங்­கு­வ­தற்குப் பதி­லாக கைய­டக்க தொலை­பேசி இலக்­கத்தை வழங்­கு­வதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

Nexus அங்­கத்­த­வர்­க­ளுக்கு தற்­போது Nexus புள்­ளி­களை பெற்றுக் கொள்ளும், மற்றும் பயன்­ப­டுத்தும் வாய்ப்பு Nexus மொபைல் ஊடாக வழங்­கப்­ப­டு­கி­றது. புதிய மொபைல் கட்­ட­மைப்பின் மூலம் எந்­த­வொரு வலை­ய­மைப்­பையும் சேர்ந்த எந்­த­வொரு மொபைல் இலக்­கத்­தையும் பிரத்­தி­யேக Nexus இலக்­க­மாகப் பயன்­ப­டுத்த முடியும்.

Nexus மொபைல் திட்­டத்தில் முத­லா­வ­தாக தன்னை பதிவு செய்­த­வ­ராக புகழ்­பெற்ற கிரிக்கெட் வீர­ரான குமார் சங்­கக்­கார திகழ்­கிறார். Nexus அங்­கத்­தவர் செய்ய வேண்­டி­யது, Nexus மொபைல் இலக்­க­மொன்றை கீல்ஸ் சுப்பர் காசா­றிடம் கைய­ளித்து புள்­ளி­களை பெற்றுக் கொள்­ளவும், பயன்­ப­டுத்­தவும் வேண்டும். 

இதன் போது அங்­கீ­கா­ரத்தை கோரும் SMS ஒன்று குறித்த மொபைல் இலக்­கத்­துக்கு அனுப்பி வைக்­கப்­படும். இதனை வாடிக்­கை­யாளர் உறுதி செய்­வதன் மூலம் புள்­ளி­களை பயன்­ப­டுத்­தலாம். இந்த அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட இலக்­கத்தை காசா­ள­ருக்கு  Nexus அங்­கத்­தவர் வழங்­கு­வ­துடன் கொள்­வ­னவு பூர்த்தி செய்­யப்­படும். 

 Nexus மொபைல் அனு­கூ­லங்­களை வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு அறி­முகம் செய்­வது தொடர்பில் நெட்வேர்க்ஸ் பிரைவேற் லிமிடெட் நிறு­வ­னத்தின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி நாலக உம­கி­லிய கருத்து தெரி­விக்­கையில், “எமது அங்­கத்­த­வர்கள் தொடர்ச்­சி­யாக Nexus இட­மி­ருந்து என்ன அனு­கூ­லங்­களை எதிர்­பார்க்­கின்­றனர் என்­பதை புரிந்து கொண்டு, அவர்­க­ளுக்கு சிறந்த தீர்­வு­களை வழங்க நாம் தயா­ரா­க­வுள்ளோம்”. 

“நாம் அனை­வரும் மொபைல் யுகத்தில் எமது ஸ்மார்ட்ஃ­போன்­க­ளுடன் வாழ்ந்து வரு­கிறோம். எமது கைய­டக்கத் தொலை­பே­சி­க­ளுடன் நாளாந்த வாழ்க்கை என்­பது பின்­னிப்­பி­ணைந்­துள்­ளது” என்றார்.

தனது அங்­கத்­த­வர்­க­ளுக்கு மேலும் பொருத்­த­மான சிறந்த சேவை­களை வழங்கும் வகையில் தனது முன்­னணி நிறு­வ­னங்­களை  Nexus மீள­மைத்து வரு­கி­றது.  தமது புள்­ளி­களை வாடிக்­கை­யா­ளர்கள் Fly SmiLe miles அடையாளங்களாக மாற்றிக் கொள்­ளவும் முடியும். 



குறு­கிய காலப்­ப­கு­தியில், Nexus என்­பது நட்­பு­ற­வான நாம­மாகத் திகழ்­கி­றது. புள்­ளிகள் சேக­ரிப்பு என்­பது இல­கு­வாக்­கப்­பட்­டுள்­ள­துடன், அவற்றை பயன்­ப­டுத்­து­வது என்­பது மிகவும் களிப்பூட்டுவ­தாக அமைந்துள்ளது.  Nexus என்பது இலங்கையில் மிகவும் விரும்பப்படும் லோயல்டி திட்டமாக அமைந்துள்ளது.

/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice        

Post a Comment

0 Comments