புத்தளம், பாலாவி பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை(23) இடம்பெற்ற வாகன
விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
சிறிய ரக லொறியொன்று, மற்றுமொரு லொறியுடன் நேருக்கு நேர் மோதி இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil Mirror
பட உதவி: Hiru News
0 Comments