Nasrina Hana
என் ஜன்னலோர பயணங்களில் வெளியிலும் நீயே தெரிகிறாய்..
நம் பிரிவுகளிலெல்லாம் நிரந்தரமாய் தங்கியிருக்கும் நம் பிரியங்களின் அடையாளம்..
என் இதய நாட்காட்டியில் என்றென்றும் அழியாத தேதி நீ..
உன் உருவம் நெஞ்சில் பதிந்து ஊமைக் கனவுகளுடன் காற்றில் கலந்தாலும்..
அன்பு மட்டும் அப்படியே அசலாக அச்சாரம் பேசும்..
இன்னும் ஏன் மௌனம்.. சொல்லிவிடு..
இதயத்தில் தங்கிவிடுகிறேன்..
இமைகளை மூடிக் கொள்கிறேன்..
நிலவின் தீண்டலுக்கு மேகக் கூட்டங்கள் காத்திருக்கும்..
பனித்துளியின் தீண்டலுக்கு பூ கூட்டங்கள் காத்திருக்கும்..
பூந்தேனின் தீண்டலுக்கு வண்டினங்கள் காத்திருக்கும்..
உன் இதயத் தடாகத்தில் இடம் தேடி என் புவனமே காத்திருக்கிறது..!!!
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments