Subscribe Us

header ads

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் 68 நாள் மாத்திரமே உயிர்வாழ முடியும்: அதிர்ச்சி முடிவு

செவ்வாய் கிரகம் குறித்து பல்வேறு உலக நாடுகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் அதிகபட்சமாக 68 நாட்களுக்கு மேல் உயிர் வாழ முடியாது என்ற உண்மையை அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
செவ்வாய் குறித்த ஆராய்ச்சிக்காக நாசா பல்வேறு செட்டிலைட்டுக்களை அனுப்பி அதன்மூலம் கிடைக்கும் தகவல்களை சேகரித்து ஆராய்ச்சி செய்து வருகிறது.
இந்நிலையில் ஒருசில நாடுகள் தற்போது செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பி அங்கு வாழவைக்க இப்போதே பயிற்சி கொடுத்து வருகிறது.
அமெரிக்காவின் நாசாவும் வரும் 2030ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
ஆனால் நேற்று அமெரிக்க தனியார் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று வெளியிட்ட ஆராய்ச்சி முடிவு ஒன்றின் அறிக்கையில், செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் அதிகபட்சமாக 68 நாட்களுக்கு மேல் உயிர் வாழ முடியாது என்று கூறியுள்ளது. இதனால் செவ்வாய் ஆராய்ச்சியாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்,.
இந்த ஆராய்ச்சி முடிவை அளித்த அமெரிக்காவின் மாசாச்சூசெட்ஸ் தொழில்நுட்பக்கழக ஆராய்ச்சியாளர்கள் செவ்வாய் கிரகத்தில் குடியேறச் செல்லும் மக்களின் உணவுக்கு தேவையான செடிகளை வளர்க்கும்போது, செடிகளில் இருந்து வெளியாகும் அதிகப்படியான ஒக்சிஜன் மனிதர்களின் உயிருக்கு தீங்காக மாறிவிடும். இந்த ஒக்சிஜனை செவ்வாய் கிரகத்தில் இருந்து வெளியேற்றக்கூடிய தொழில்நுட்பம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர்.

Post a Comment

0 Comments