Subscribe Us

header ads

மன்னார் வங்காலையில் நிலத்தடியிலிருந்து 24 மணி நேரமும் பாயும் நீர் (படங்கள் இணைப்பு)

(எஸ்.றொசே­ரியன் லெம்பேட்)

வங்­கா­லை­யூ­டாக நானாட்டான் கிரா­மத்­திற்குச் செல்லும் பிர­தான வீதியில் உள்ள பாலம் புன­ர­மைப்­ப­தற்­காக தோண்­டப்­பட்ட குழி­யி­லி­ருந்து தொடர்ச்­சி­யாக நீர் பாய்ந்து கொண்­டி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது. இதனை அதிக எண்­ணிக்­கையில் மக்கள் பார்­வை­யிட்டு வரு­கின்­றனர். வங்­காலை இரத்­தி­ன­புரி கிரா­மப்­ப­கு­தி­யிலே இவ்வாறு காணப்படுகிறது.

குறித்த பகு­தியில் உள்ள வீதி மற்றும் பாலம் சேத­ம­டைந்­துள்ள நிலையில் குறித்த பாலத்தை புன­ர­மைப்பு செய்­வ­தற்கு வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபை நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வந்­தனர்.

இந்த நிலையில் குறித்த வீதிக்கு அரு­கா­மையில் பரி­சோ­த­னைக்­காக பள்ளம் தோண்­டிய போது தொடர்ச்­சி­யாக நீர் பாய ஆரம்­பித்­தது. நிலத்­தடி நீரே ஊற்­றாக 24 மணி நேரமும் பாய்­வ­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

இந்த நிலையில் நேற்று வியா­ழக்­கி­ழமை மாலை அப் பகு­திக்குச் சென்ற வட­மா­காண மீன்­பிடி மற்றும் போக்­கு­வ­ரத்து அமைச்சர் பா.டெனிஸ்­வரன் நீர் பாய்ந்து கொண்­டி­ருப்­பதை பார்­வை­யிட்­ட­தோடு அந் நீரையும் சுவைத்­துப் ­பார்த்தார்.

இதன் போது கருத்துத் தெரி­வித்த அமைச்சர் பா.டெனிஸ்­வரன், குறித்த நீர் 24 மணி நேரமும் பாய்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. குடிப்­ப­தற்கு சுவை­யாக உள்­ளது. இந்த நீரை சுத்தம் செய்து மக்­களின் பாவ­னைக்கு பயன்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

அருகில் கடல் இருக்­கின்ற போதும் நீரில் எவ்­வித உவர்ப்புத் தன்­மையும் இல்லை. நிலத்­தடி நீரை பாது­காக்க வேண்டும்.வங்­காலை மக்­க­ளும்­, ­அ­தனை சூழ்ந்­துள்ள கிராம மக்­களும் இதனை பயன்­ப­டுத்­தக்­கூ­டிய வகையில் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.





/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் https://www.facebook.com/kalpitiyavoice 

Post a Comment

0 Comments