Subscribe Us

header ads

சிறுசிறு தேர்தல் வன்முறை சம்பவங்ளுடன் ஊவா மாகாண சபைத்தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது



பதுளை மற்றும் மொனராகலை ஆகிய இரு மாவட்டங்களையும் உள்ளடக்கிய ஊவா மாகாண சபைத்தேர்தலுக்கான வாக்களிப்பு 834 மத்திய நிலையங்களிலும் இன்றுக்காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது என்று மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பதுளை மாவட்டத்தில் 516 மத்திய நிலையங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் 318 நிலையங்களிலும் வாக்களிப்பு இடம்பெற்றன.

வாக்களிப்பில் பாரிய அசம்பாவிதங்கள் ஏதும் இடம்பெறாத போதிலும் இரு மாவட்டங்களிலும் ஆங்காங்கே சிறுசிறு தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதியப்பட்டுள்ளன என்று தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

வாக்குப்பெட்டிகள் வாக்கெண்ணும் மத்தியநிலையங்களுக்கு கொண்டு சென்றதன் பின்னர், மாலை 6 மணியளவில் தபால் மூல வாக்குகள் எண்ணப்படும். நள்ளிரவுக்கு முன்னர் முதலாவது பெறுபேற்றை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.


Post a Comment

0 Comments