Subscribe Us

உயர்நிலை கல்லூரிகளில் ஹிஜாப் அணியலாம் - தடை நீக்கப்படும்

உயர் நிலை கல்லூரி (High Schools) மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடைசெய்யும் சட்டம் நீக்கப்படவுள்ளது.
மதச்சார்பற்ற அரசியல் கொள்கையுடைய துருக்கி நாட்டில் உயர் நிலை கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவது (தலையை மறைப்பது) சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது.
இத்தடை உத்தரவில் சலுகையை வழங்கும் சட்ட மூல திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பிரதி பிரதம மந்திரி புலன்ட் அரின்க் Bulent Arinc தெரிவிக்கின்றார்.
இப் புதிய சட்டத்தின் பிரகாரம் உயர் நிலை கல்லூரி மாணவிகள் தலையைத் திறந்து இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட மாட்டார்கள்.
இச் சட்டத் திருத்தம் குறித்து துருக்கி பிரதம மந்திரி அஹ்மட் தாவூத்குலு தெரிவிக்கும்போது, "இதை ஹிஜாப் தடையை நீக்குவதாக மட்டும் நோக்கக் கூடாது. சுதந்திரமும் ஜனநாயகமும் அனைத்துத் துறைகளிலும் உத்தரவாதப்படுத்தலாகும்" எனக் கூறினார்.
எனினும் இத் தீர்மானத்தை எதிர்ப்பவர்கள், 'துருக்கி சமூகத்தை மத்திய காலத்துக்கு பின்னோக்கி கொண்டுபோகும் செயல்' என விமர்சிக்கின்றனர்.

நன்றி: Muslimvillage
/Az

Post a Comment

0 Comments