Subscribe Us

header ads

வடமேல் மாகாண கடற்றொழில் அமைச்சருக்கு எதிராக கிராம உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்


புத்தளம் மாவட்டத்தில் கிராம உத்தியோகத்தர்கள் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆராச்சிக்கட்டு பிரதேச செயலக வளாகத்தில் வடமேல் மாகாண கடற்றொழில் அமைச்சர். கிராம உத்தியோகத்தர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்தை கண்டித்தே இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

இந்த அச்சுறுத்தலை தமது சங்கம் வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள்சங்கத்தின் புத்தளம் மாவட்ட கிளையின் செயலாளர் அஜித் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பாக சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சினை நியாயாதிக்க சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நன்றி: News1st
-AsM-

Post a Comment

0 Comments