இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 64ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்.
இந்நிலையில்,
நரேந்திர மோடி, இந்தியாவின் பிரதமராக பதவியேற்றதன் பின்னர், முதன்முறையாக
இன்று தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றார்.காந்தி நகரில் உள்ள தனது சகோதரரின் வீட்டுக்குச் சென்ற பிரதமர், தாயார் ஹீரா பென்னிடம் ஆசி பெற்றார்.
இந்த சந்திப்பின் போது ஜம்மு-காஷ்மீர் மாநில வெள்ள நிவாரண நிதிக்கு 5,000 ரூபாய் நன்கொடை அளித்துள்ளார் மோடியின் தாயார்.
பிரதமர்
மோடியின் பிறந்தநாளையொட்டி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி
ஹமித் அன்சாரி, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, தமிழக முதல்வர் மற்றும்
விஜயகாந்த் உள்ளிட்ட பலர் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


0 Comments