Subscribe Us

header ads

வாக்கு பெட்டியின் மேல் சீ சீ டீவி கெமரா.. ஊவா தேர்தலில் ரூம் போட்டு யோசித்த குரூப்.



வாக்கு பெட்டியின் மேல் சீ சீ டீவி கெமரா....இது ஊவா தேர்தலில்  

நடந்து முடிந்த ஊவா மாகாண சபை தேர்தலில் முடிந்துள்ள நிலையில் தேர்தல் காலத்தில் இடம்பெற்ற சில சுவாரஷ்யமான சம்பவங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வருகின்றன‌.

மொனாராகளை மாவட்டத்தில் உள்ள குறித்த ஒரு பிரதேச சபையில் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் சிலர் அங்குள்ள  சிலோன் வத்த எனும் தோட்ட மக்களின் வீடுகளுக்கு சென்று  விருப்பு வாக்குகளை வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் குறித்த ஒருவருக்கு மட்டும் வழங்குமாறு பணித்துள்ளார்.

வாக்குப்பெட்டியின் மேல் CC TV பொருத்தப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் உங்களை கண்காணித்துக் கொண்டிருப்போம் எனவும், வேறு எந்த கட்சிக்கோ வேறு எவருக்கோ புள்ளடியிட்டால் நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் எனவும் குறித்த சிலோன் வத்த  தோட்ட மக்களிடம்  அந்த குழுவினர் எச்சரிக்கை செய்துள்ள செய்தியை சிங்கள ஊடகம் ஒன்று இன்று வெளியிட்டுள்ளது. 
நன்றி:MadawalaNews

Post a Comment

0 Comments