மிகவும் சூடாக நடந்து முடிந்த உவா மாகாண சபைத்தேர்தலின் பின் எல்லா இலங்கை மக்களாலும் எதிர்ப்பார்க்கப்படும் தேர்தல் தான் அடுத்த வருடம் (2015) முதல் 3 மாத பகுதிக்குள் நடைப்பெற இருக்கும் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அடுத்த “ஜனாதிபதி யார்” என்பதை தெரிவு செய்யும் ஜனாதிபதி தேர்தல்.
இந்த தேர்தலில் யார் எந்த சின்னத்தின் கீழ் போட்டியிடுவார்கள் என்ற ஒரு கேள்வி மக்கள் மத்தியில் பெரும் பாலும் சந்தேகத்துக்கிடமின்றி இருந்துகொண்டிருக்கிறது. அதற்கான காரணம் இருக்கும் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக்காலம் மற்றும் முன்னாள் ஜானதிபதி சந்திரிக்கா அம்மையார் மற்றும் சரத் பொன்சேகா கூட்டு சேர்ந்து பொது வேட்பாளராக களம் இறங்குதல், ரணில் மற்றும் சஜித் அவர்களின் உள்வீட்டு பிரச்சினை போன்ற அம்சங்களை குறிப்பிடலாம்.
எது எப்படி இருந்தாலும், தேர்தலில் வாக்களிக்கும் உரிமை எல்லோரும் இருக்கிறது, அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்யும் பொறுப்பு மக்களின் மீது தான் சுமத்தப்பட இருக்கிறது என்று நாம் அறிந்திருந்தாலும். அந்த மக்களின் பெயர்கள் வாக்காளர் பதிவுப்புத்தகத்தில் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைக்கும் என்பது உண்மை.
அந்த வகையில் இலங்கை குடியரசின் ஒவ்வொரு பிரஜையும் தனது பெயர் வாக்காளர் இடாப்பிலே இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள பின்வரும் வலைத்தளத்துக்கு (http://www.slelections.gov. lk/id/index.aspx) சென்று தனது மாவட்டம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை கொடுப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இப்படி ஒவ்வொரு பிரஜையும் தனது பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொண்டு மற்றவர்களுக்கும் இதனை தெரியப்படுத்தி தனது பெயரை ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்து கொள்ளும் படியும், அப்படி உங்களுடைய பெயர் இல்லாவிட்டால் உங்கள் பிரதேசத்தில் இருக்கும் கிராம உத்தியோகத்தர்களை உடனடியாக சந்தித்து தனது பெயர் இந்த மாதம் (செப்டம்பர்) 26 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்!
சமுக வலைத்தளங்களில் இருக்கும் நண்பர்கள், இளைஞர்கள் தனது பெயர் இருக்கிறதா என்பதை பார்த்துவிட்டு, அதனை ஒரு போடோவாக (photo) படம் எடுத்து facebook, twitter, Instagram, whatsapp, telegram மற்றும் viber போன்ற ஊடகங்களில் #SLVote என்ற hashtag சொல்லையும் சேர்த்து பதிவிட்டால், மிகவும் வேகமாக இது எல்லா மக்களையும் சென்றடையும் என்பதனையும் மிகவும் தாழ்மையாக வேண்டிக்கொள்கிறோம்!
வாக்களிக்கும் உரிமை என்பது மிகவும் முக்கியாமனதொன்று, ஆகவே இதனை ஒவ்வொருவரும் பொறுப்போடு பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எல்லோரினதும் ஆசை காரணம் ஒவ்வொரு வாக்குகளும் பெறுமதியானது, ஆட்சிகள் அமைக்கப்படுவதும், ஆட்சிகள் வீழ்த்தப்படுவதும், மக்களின் தேவைகளை நிறைவேற்ற மக்களின் குவிக்கப்பட்ட அதிகாரங்கள் கொடுக்கப்படுவதும் இந்த வாக்குகளினால் தான் என்பதை மறக்காது, பொறுப்புடன் தனது பெயரை பதிவு செய்யுமாறு மிகவும் தாழ்மையாக மீண்டும் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்!
இளைஞர்கள், நண்பர்கள் சமுக வலைத்தளத்தில் பதிவு செய்வதற்கான முறையினை கீழுள்ள உதாரணம் மூலம் அறிந்துகொள்ளலாம்!
நன்றி!
கத்தாரில் இருந்து வலக்கரம்

0 Comments